இயக்குநர் ஹரி, நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க இருக்கிறார் என கோடம்பாக்கம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுவரை இயக்குனர் ஹரி படத்தில் விஜய் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வேலாயுதம் வெற்றிக்குப் பின்னர் விஜய்யை, ஹரி சந்தித்ததாகவும் அப்போது ஒரு லைன் ஸ்க்ரிப்ட் ஒன்றை விஜய்யிடம் சொல்லி உடனே ஓகே வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது துப்பாக்கியில் விஜய்யும், சிங்கம் 2ல் ஹரியும் பிஸியாக இருப்பதால், முறையே தங்களது புராஜக்டுகளை முடித்துக் கொண்டு புதிய படத்திற்காக இருவரும் இணைவார்கள் என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக